ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் உள்ளது அகாசகா மாவட்டம். இங்கு ‘ஒடாசுகே' (உதவும் கரங் கள்) எனும் இரவு நேர கேளிக்கை உணவகம் செயல்படுகிறது.
இதில் விசேஷம் என்னவெனில் தலைமுடி கொட்டி வழுக்கை விழுந்தவர்கள் இங்கு தயங்காமல் வரலாம், அவர்கள் சாப்பிடும் உணவுக்குத் தள்ளுபடியும் பெறலாம் என்பதுதான்.
மேற்கத்திய நாடுகளைப் போன்று ஜப்பானியர்களுக்கு தலையில் வழுக்கை விழும் பிரச்சினை அவ்வளவு பரவலாக இல்லையென்றாலும் சுமார் 26 சதவீத ஆண்கள் முடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்பட் டுள்ளனர். மரபணு, பணி அழுத்தம் ஆகியவை இதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
“ஹாலிவுட் நடிகர்கள் தங்கள் வழுக்கையை மறைக்காமல் மொட்டைத் தலையுடன் அப்படியே நடிக்கும்போது ஜப்பானியர்கள் மிகவும் கூச்சப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு வகையில் ஊக்கமளிக்கத்தான் முடியுதிர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தள்ளு படி அளிக்கப்படுகிறது” என்கிறார் இந்த உணவகத்தின் உரிமையாளர் யோஷிகோ டொயோடா.
இந்தவகையில் முடிஉதிர்வால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 500 யென் (சுமார் 295 ரூபாய்) வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐந்து பேர் மது அருந்தச் சென்றால், ஒருவருக்கு முற்றிலும் இலவசமாக மது வழங்கப்படுகிறது. உணவகத்தின் சுவர்களில் எல்லாம் முடி உதிர்வு பிரச்சினைகள் குறித்த சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சலுகைகளால் இந்த உணவ கம் வேகமாகப் பிரபலமாகி வருகிறது.