சொகுசு வாகனங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் வெளிவந்த நவாஸ் ஷெரீப், லண்டனில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில், அவரை நாடு திரும்பி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கெடு விதித்தது.
நவாஸ் ஷெரீப் ஆஜராகாத நிலையில், அவரை தேடப்படும் குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்று அறிவித்தது. லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் கைது வாரன்ட் பிறப்பிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது சொத்துக்களை முடக்கவும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.