உலகம்

இலங்கை போர்க்குற்றம் பற்றி விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: விக்னேஸ்வரன் வரவேற்பு

பிடிஐ

இலங்கை போர் குறித்து விசாரிக்க சர்வதேச சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற ஐநா மனித உரிமை ஆணையத்தின் (யுஎன்எச்ஆர்சி) பரிந்துரையை இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றுள் ளார்.

இலங்கையில் 2009 ம் ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடு தலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்டப்போரில் ராணுவத்தால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கையை ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது.

போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் இரு தரப்பினருமே ஈடுபட்டு உள்ளனர் என்றும், இது தொடர்பாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் ஆணையர் ஜெயித் ராத் அல் ஹுசைன் பரிந்துரை செய்திருந்தார்.

இந்நிலையில், ஐநா மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரை நேற்று முன்தினம் இலங்கையின் வட மாகாண சபையில் தாக்கல்செய்யப்பட்டது. அப்போது முதல்வர் விக்னேஸ்வரன் கூறும் போது, “ஐநா மனித உரிமை ஆணையத்தின் இந்த அறிக்கை மிகவும் விரிவானது. சமரசம் ஏற்படுத்துவதற்காக எடுக்கப் பட்டுள்ள வியத்தகு நடவடிக்கை.

உண்மையான நல்லிணக் கத்தை அடைவதற்கான மக்களின் ஆர்வத்தை நோக்கிய நடவடிக் கைகளை இந்த அறிக்கை பிரதி பலிப்பதாக அமைந்துள்ளது. இதை வரவேற்கிறோம்” என்றார்.-

SCROLL FOR NEXT