உலகம்

இந்தியாவில் புதிதாக அமையும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு: பிரிட்டிஷ் பிரதமரிடம் நவாஸ் ஷெரீப் உறுதி

செய்திப்பிரிவு

இந்தியாவில் புதிதாக யார் ஆட்சி அமைத்தாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உறுதியளித் துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான பின் நவாஸ், முதல்முறையாக பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்பயணத்தின்போது பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன், அமைச்சர்கள் மற்றும் அமைச்சக செயலர்களை நவாஸ் சந்தித்துப் பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு, கலாசாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப் பது குறித்து இரு தரப்புக்கும் இடையே விவாதம் நடைபெற்றது.

கேமரூன் நவாஸ் சந்திப்புக்குப் பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. பாதுகாப்புத் துறை, பொருளாதார ஒத்து ழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் அமைய இருக்கும் புதிய அரசுகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக பிரிட்டனிடம் நவாஸ் உறுதியளித் துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த 4 ஆண்டு களில் ஒரு லட்சம் ஆசிரியர்க ளுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரிட்டன் உறுதியளித்துள்ளது.

SCROLL FOR NEXT