உலகம்

எகிப்தில் மசூதிகள் திறப்பு

செய்திப்பிரிவு

எகிப்தில் மார்ச் மாதத்திற்குப் பிறகு வழிபாடுகளுக்காக மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து எகிப்து அரசு வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் மாதத்திற்குப் பிறகு எகிப்தில் மீண்டும் மசூதிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றினர். அனைவரும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் கரோனா தொற்றால் 98,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,300 பேர் பலியாகினர்.

கரோனா பரவல் ஒரு பக்கம் இருந்தாலும், எகிப்து அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. விமானச் சேவையும் அங்கு தொடங்கப்பட்டது.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலும், மற்றொரு முக்கிய நகரமான கிசாவிலும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் எகிப்து அரசு ஈடுபட்டுள்ளது.

கருவுற்றிருக்கும் சமயத்தில் பெண்களின் நோய் எதிர்ப்புச் சக்தி சில காரணங்களால் சற்று குறையக்கூடும், அதன் காரணமாக கரோனா தொற்றுக்கு அவர்கள் எளிய இலக்காக மாறக்கூடும் என்பதால் தற்சமயம் கருவுறுதலைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று எகிப்து சுகாதார அமைச்சகம் ஏற்கெனவே கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT