பிரிட்டனில் 54 சிறிய சுழல் விசிறிகளை (புரொபல்லர்) பயன்படுத்தி சிறிய ட்ரோன் விமானத்தை உருவாக்கியுள்ளார் ஓர் இளைஞர்.
சிறியரக ஆள் இல்லாத விமானத்தை பார்த்தபோது நாம் ஒரு எலியாக இருந்தால், அதில் ஏறி ஜாலியாக சுற்றலாம் என்ற எண்ணம் தோன்றியது. இதையடுத்து எனக்கான விமானத்தை வடிவமைக்க வேண்டும் என்றுற முயற்சித்தேன். அதன் பலனே இந்த குட்டி விமானம். 54 சிறிய புரொபல்லர்கள், 6 கம்பி சட்டங்கள்தான் இதன் முக்கிய பாகங்கள்.
விமானம் தரையில் வசதியாக நிற்பதற்கும், சமநிலையில் இருப்பதற்கும் கம்பி சட்டங்கள் உதவுகின்றன. ஒருவர் அமர்ந்து செல்ல இருக்கை அமைத்துள்ளேன். அதன் கைப்பிடியிலேயே விமானத்தை கட்டுப்படுத்தும் ஸ்விட்ச்களை வடிவமைத்துள்ளேன். அதிகபட்ச மாக 148 கிலோ எடைவரை விமானம் தாங்குகிறது. 10 நிமிடங்கள் வரை பறக்க முடிகிறது என்று அந்த இளைஞர் கூறியுள்ளார்.
தனது சிறிய விமானத்தில் அந்த இளைஞர் பறக்கும் வீடியோ யூ டியூப்பில் வெளியாகி ஏராளமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.
தனது கண்டுபிடிப்புக்கு தி ஸ்வார்ம் என்று அவர் பெயரிட்டுள் ளார். சாலையில் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற புதிய கண்டுப்பிடிப்புகள் மூலம் ஒவ்வொருவரும் தனியாக பறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.