பிலிப்பைன்ஸில் நடத்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 11 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் ராணுவ அமைச்சகம் தரப்பில், “பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள சுலு மாகாணத்தின் பரப்பான சந்தைப் பகுதியிலும், சர்ச் பகுதியிலும் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட அடுத்தடுத்த குண்டுவெடிப்பில் 11 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர்.
முதல் குண்டுவெடிப்பு 12 மணியளவிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு 1 மணியளவிலும் நடத்தப்பட்டது. இதில் இரண்டாம் குண்டுவெடிப்பை பெண் ஒருவர் நடத்தி இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பில் பொதுமக்களும், ராணுவ வீரர்களும் பலியாகி உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் குண்டுவெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட இந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கரோனா தொற்று
பிலிப்பைன்ஸில் கரோனாவுக்கு 1,94,252 பேர் பலியாகி உள்ளனர். 1,32,042 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.