பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “ பிலிப்பைன்ஸில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் குறித்து பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் தரப்பில், “ பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள், சாலைகள் பாதிப்புக்குள்ளாகின. ஏராளமான வீடுகளீல் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியாகி உள்ளாகி உள்ளார். 6 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிலிப்பைன்ஸில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிலநடுக்கம் காரணமாக 7 பேர் பலியாகினர். 215 பேர் காயமடைந்தனர்.
ரிங் ஆஃப் ஃபயர்
ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா வழியாகவும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் ‘தீவிர நில அதிர்வு விளைவுகளின் வளைவு’ என அழைக்கப்படும் பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்'-ன் ஒரு பகுதி பிலிப்பைன்ஸின் சிறுபகுதியையும் உள்ளடக்கி உள்ளது.
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் அவ்வப்போது சுனாமி பாதிப்புகளும் ஏற்படுகின்றன.