கரோனா வைரஸ் இளம் வயதினரால் வேகமாக அதிகரிக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “ கரோனா வைரஸ் பாதித்த இளம் வயத்தினர்களிடம் கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத காரணத்தால் அவர்களிடமிருந்து கரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. 20 வயது முதல் 40 வயதுக்குட்பவர்களுக்கு கரோனா பாதித்திருந்தாலும் அவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. இவ்வாறு இருப்பதால் வயதானவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் எளிதாக பாதிக்கப்படுவார்கள். மேலும் அடர்த்தியான நகரங்களில் வசிப்பவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த சூழலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. உலகிலேயே முதல் நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.
உலக முழுவதும் கரோனா தொற்றால் 2,20,94,973 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.