அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது, ட்ரம்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. துணை அதிபர் வேட்பாளராக இந்திய-அமெரிக்க-ஆப்பிரிக்க பெண்மணி கமலா ஹாரிஸ் நிற்கிறார்.
இந்நிலையில் ஜோ பிடன், கமலா ஹாரிஸ் இருவரையும் முறைப்படி அறிவிக்கும் ஜனநாயகக் கட்சியின் 4 நாள் மாநாடு வாஷிங்டனில் நேற்று தொடங்கியது.
முதல்நாளான நேற்று சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாக கூட்டு வழிபாடு நடந்தது. அமெரிக்காவின் டலாஸில் இயங்கி வரும் சின்மயா அறக்கட்டளை சார்பாக அதன் முக்கிய நிர்வாகி நீலிமா கோனுகுண்டாலா அனைவருக்கும் அமைதி வேண்டும் என்ற வேத மந்திரத்தைப் படித்தார்.
மகாபாரதத்தில் உள்ள கடவுள் எங்கு இருக்கிறாரோ அங்கு தர்மம் இருக்கும் தர்மம் எங்கு இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கும் என்ற வரிகளைக் குறிப்பிட்டு தேர்தலில் ஜோ பிடனும், கமலா ஹாரிஸும் வெற்றிபெறுவர் என்றார்.
வேத மந்திரங்களோடு அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் உள்ள சீக்கிய குருத்துவாராவிலிருந்து வந்திருந்தவர்கள், சிறப்பு வழிபாடு நடத்தினர்.
எனவே ஜனநாயகக் கட்சி மாநாட்டில் இந்துக்கள், சீக்கியர்களை திருப்தி படுத்தும் விதமான வேதமந்திரங்கள் மற்றும் சீக்கிய மதவழிபாடுகள் நடந்துள்ளன.