உலகம்

கரோனாவை அமெரிக்கா சிறப்பாக கையாள்கிறது: ட்ரம்ப்

செய்திப்பிரிவு

பெரிய நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்கா கரோனா வைரஸை சிறப்பாகக் கையாள்கிறது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “ பல பெரிய நாடுகளைவிட நாங்கள் கரோனா வைரஸை சிறப்பாகக் கையாள்கிறோம். இந்தியா, சீனாவைவிட கரோனா வைரஸை நாங்கள் சிறப்பாக எதிர்கொள்கிறோம். இந்தியா பெரிய பிரச்சினையில் உள்ளது. சீனாவில் மீண்டும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. பிற நாடுகளும் கரோனாவால் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளன.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்கா 6 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துள்ளது. கரோனா மருத்துவப் பரிசோதனைகளும் விரைவாக நடத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் தொடர்ந்து வெளியில் நடமாடி வருவது அதிகரித்து வருகிறது. மதுபான விடுதிகள், ரெஸ்டாரன்ட்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றில் கூடும் அமெரிக்க மக்கள், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் முகக்கவசம் அணியாமல் வருவது மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக டெக்ஸாஸ், ப்ளோரிடா, கலிபோர்னியா போன்ற நகரங்களில் மீண்டும் கரோனா நோய்ப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் 47,13,500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,55,402 பேர் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT