தென் ஆப்பிரிக்க நாட்டில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்கைக் கடந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில்தான் உலகின் கரோனா பாதிப்பில் 50 சதவீதம் பாதிப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கரோனாவில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அமெரி்க்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. அதைத் தொடர்ந்து ரஷ்யாவும் இருக்கின்றன.
தென் ஆப்பிரி்க்காவில் நேற்று கரோனாவில் ஒரேநாளில் 10 ஆயிரத்துக்கு 107 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு ஒட்டுமொத்த பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்து 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
டர்பன் நகரில் உள்ள வைரலாஜி வல்லுநர் டெனிஸ் சோப்ரா கூறுகையில் “ உலகளவில் கரோனாவின் ஒட்டுமொத்த பாதிப்பைவிட, உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். ஏனென்றால், குறைவான பரிசோதனை உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு அளவு குறைவாகவே இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் 5லட்சம் பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது, வேகமாக பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதே வேகத்தில் சென்றால், 10 லட்சத்தை விரைவில் எட்டிவிடுவோம்.
இந்த எண்ணிக்கையெல்லாம் குறைவான மதிப்படு. இந்த வைரஸ் நீண்டகாலம் நம்மோடு இருக்கப்போவதால், அதை கடக்க நாம் அதிக ஆண்டுகள் தேவைப்படும் ” எனத் தெரிவி்த்தார்
தென் ஆப்பிரிக்காவின் காடெங் மாகாணத்தில் உள்ள ஜோகன்னஸ்பெர்க், பிரிட்டோரியா ஆகியவற்றில் நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 35 சதவீதம் அங்குதான் இருக்கின்றனர்.
ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தில்தான் தென் ஆப்பிரி்க்காவில் கரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நாள்தோறும் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படும் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்தது. ஆனால், பொருளாதார பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்லவே கடந்த ஜூன் மாதத்திலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தென் ஆப்பிரி்க்காவில் இப்போதே வேலையின்மை அளவு 30 சதவீதம் அதிகரி்த்துள்ளது. மருத்துவமனைகளுக்கு கரோனா பாதிப்பைச் சமாளிக்கும் வகையில் மருந்துகள், மாத்திரைகள், உபகரணங்களை போதுமான அளவில் அனுப்ப முடியாமல் அரசு திணறி வருகிறது. சர்வதேச நிதியத்திலிருந்து 430 கோடி டாலர் கடனாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்தக்கது.