அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவையில் எம்.பி.யான பிராங்க் பலோன் நேற்று முன்தினம் கூறியதாவது:
லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 1962-ல்நடந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 2,100 மைல் தூரத்துக்கு உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு ஏற்படுத்தப்பட்டது. அந்த கோட்டைத் தாண்டி சீனா தனது 5 ஆயிரம் ராணுவ வீரர்களை இறக்கியது கண்டிக்கத்தக்கது. இதன்மூலம் சீனாவின் ஆக்கிரமிப்பு வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
எதிர்காலத்தில் இதுபோன்றநடவடிக்கைகளில் சீனா ஈடுபடாமல் இருக்க தூதரக அடிப்படையிலான நடவடிக்கையை எடுப்பது தொடர்பாக இந்த அவையில் தீர்மானம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.