உலகம்

சீனாவில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று

செய்திப்பிரிவு

சீனாவில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன சுகாதார அமைப்பு தரப்பில், "சீனாவில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 20 பேர் சின்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். வெள்ளிக்கிழமை கரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. 1,955 பேர் குணமடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கவுண்டாங், ஷாங்காய் போன்ற பகுதிகளிலும் கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவில் தொடர்ந்து 11,500 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

சீனாவில் இதுவரை 83,784 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,889 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 4,634 பேர் பலியாகி உள்ளனர்.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த்தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்குள்ள ஓர் இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பீஜிங்கில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT