2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் மத்திய தரைக்கடலை தாண்டி ஐரோப்பாவில் தஞ்சமடைவார்கள் என்று அகதிகளுக்கான ஐ.நா. ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. ஆணை யம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது: இதுவரை 3 லட்சத்து 66 ஆயிரம் அகதிகள் மத்திய தரைக்கடலை தாண்டி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டிவிடும். அடுத்த ஆண்டில் 4.5 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாகவே இருக் கும். பெரும்பாலான அகதிகள் கிரீஸ் வழியாகவே ஐரோப்பாவுக்குள் வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 7 ஆயிரம் அகதிகள் மாஸிடோனியா வழியாக வந்துள்ளனர்.
அகதிகள் விஷயத்தில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் வளைகுடா நாடுகளும் தங்களுக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
அகதிகளை கையாளுவது குறித்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் இந்த வாரம் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளன.
இதனிடையே ஐரோப்பாவில் எழுந்துள்ள அகதிகள் பிரச்சினை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் மாளிகை,
‘ஐரோப்பாவில் தஞ்சமடையும் அகதிகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. இதில் உதவுவது தொடர்பாக அமெரிக்கா விரைவில் முடிவு எடுக்கும்’ என்று தெரிவித்துள்ளது.