அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலகப்புகழ் பெற்ற சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. 305 அடி உயரம் கொண்ட இந்த சிலையின் எடை 204.1 டன். அமெரிக்கா சுதந்திரம் அடைந்து நூறாண்டுகள் ஆனபோது, பிரான்ஸ் நாடு இந்த சிலையை பரிசாக வழங்கியது.
நியூயார்க்கில் நேற்று புயலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, சுதந்திர தேவி சிலையை 5-க்கும் மேற்பட்ட முறை அடுத்தடுத்து மின்னல்கள் தாக்கின. இந்த காட்சியை மிக்கி கீ என்ற புகைப்படக் கலைஞர் வீடியோ எடுத்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே, லட்சக்கணக்கானோர் இதனை ரீ-ட்வீட் செய்துள்ளனர். அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் ஆட்சியில், மக்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அதைக் குறிக்கும் இயற்கையின் குறியீடாக இது இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.