உலகம்

ஐ.நா. அமைதிப்படை தலைவராக நார்வே பெண் கமாண்டர்

செய்திப்பிரிவு

முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை தலைவராக நார்வேயை சேர்ந்த பெண் கமாண்டர் கிறிஸ்டின் லுன்ட் (56) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வெளியிட்டார்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள ஐ.நா. அமைதிப்படைக்கு கிறிஸ்டின் லுன்ட் தலைமை வகிப்பார். அப்படைக்கு தலை வராக உள்ள சீனாவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாவோ லியூவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவுபெறுகிறது. அவருக்கு பதிலாக கிறிஸ்டின் லுன்ட் தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார். நார்வே ராணு

வத்திலும், ஐ.நா. அமைதிப்படையிலும் பல்வேறு பொறுப்பு களில் 34 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம், கிறிஸ்டின் லுன்டுக்கு உள்ளது. சைப்ரஸில் கிரேக்கர்களுக்கும், துருக்கியர்களுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மோதலைத் தடுக்க 1964-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைதிப்படை அந்நாட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

SCROLL FOR NEXT