மனிதனின் செயற்பாடுகளால் தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாறுபாடு மற்றும் பாதிப்பு அமெரிக்காவிலும் பரவலாக இருப்பதாக விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘தேசிய பருவநிலை ஆய்வு மதிப்பீடு’ என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வை அமெரிக்க அரசின் அறிவுறுத்தலின்படி விஞ்ஞானிகள் குழு ஒன்று மேற்கொண்டது. அதன் இறுதி அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து அந்த அறிக்கையை அமெரிக்க அதிபர் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது.
வெப்பக்கற்று, காட்டுத் தீ போன்றவற்றால், சிறு உயிரி னங்கள் வாழ வழியற்ற நிலையில் அழிவைச் சந்தித்து வருகின்றன. காற்றில் கரியமில வாயு, மீத்தேன் போன்றவை அதிகரிப்பதால் ஆண்டுதோறும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் தற்போதுள்ளதைவிட 10 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலம் நீண்டுள்ளதுடன் வெப்பத்தின் அளவும் அதிகரித் துள்ளது. மழைக் காலத்தின் எப்போதையும்விட அதிக அளவு மழை பெய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நாஸ்வில், கொலாராடோ, வாஷிங்டன், புளோரிடா ஆகிய பகுதிகளில் மழை அளவு வழக்கத்தைவிட அதிக அளவில் பதிவாகியிருந்தது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பூச்சிகளின் பெருக்கம் அதி கரித்து பயிர்கள் அதிக அளவில் சேதமடையும் நிலை, அமெரிக்காவின் மேற்கே உள்ள சில இடங்களில் காணப்படுகிறது.
வரும் காலத்தில் நீர் பற்றாக்குறையால் உணவு தானிய உற்பத்தி குறைந்துவிடும் அபாயம் உள்ளது. இதன் மூலம் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது.
காற்று மண்டலத்தை வெப்பப்படுத்தும் வாயுக்கள் வெளியா வதை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய சேதத்தை அமெரிக்கா சந்திக்க நேரிடும். வெப்பம் அதிகரிப்பதால் பனி உருகி கடலில் அதிக அளவில் கலக்கிறது. இதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அமெரிக்க கடற்பகுதிகளில் நீரின் மட்டம், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒன்று முதல் நான்கு அடி வரை உயர வாய்ப்புள்ளது.
கார்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பு, அதிக மின் சக்தி பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் வெப்பத்தை அதிகரிக்கும் வாயுக்கள், காற்று மண்டலத்தில் கலப்பதை அமெரிக்காவில் கட்டுப்படுத்த முடியவில்லை. உலகளவில் இந்த வாயுக்களை வெளியிடுவதில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா உள்ளது.
பருவ நிலை தொடர்பாக அமெரிக்காவில் நாடு முழுவதற்கு மான விரிவான சட்டம் எதுவும் இல்லாத நிலையில், மாகாண அரசுகள் அது தொடர்பாக சட்ட மியற்ற முயற்சித்து வருகின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, அதிபர் ஒபாமா தலைமையிலான அரசின் பருவ நிலை தொடர்பான கொள்கைக்கு மக்களிடையே ஆதரவைப் பெற்றுத் தரும் என கருதப்படுகிறது.
ஆனால், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியினர், ஒபாமாவின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.