உலகம்

மெக்சிகோ, கனடாவுடன் எல்லை மூடல் தொடரும்: அமெரிக்கா அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் எல்லை மூடல் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிவரை தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், “ அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 4 மாதமாக தொடரும் எல்லை மூடல் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதிவரை தொடரும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக 70,000 பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்போது எல்லை மூடல் உத்தரவை மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலக அளவில் கரோனா தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.புளோரிடா, அரிசோனா மாகாணங்களில் மட்டுமல்ல நெவாதா, ஓக்லஹாமா போன்ற மாகாணங்களிலும் கரோனா வேகமாகப் பரவுகிறது. கடந்த 14 நாட்களாக அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கூடுதலாக அதிகரித்துள்ளது.

கரோனா பரவல் நீடித்து வந்தபோதிலும் கடந்த மாதத்தில் அமெரிக்காவில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் புழக்கம் அதிகரித்தது.

குறிப்பாக கலிபோர்னியா, நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா மாகாணங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT