உலகம்

அரசு மரியாதை இல்லாமல் சீன வீரர்கள் உடல் அடக்கம்- அமெரிக்க உளவுத் துறை தகவல்

செய்திப்பிரிவு

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ம் தேதிஇந்திய - சீன ராணுவ வீரர்கள்மோதிக் கொண்டனர். இதில்இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் இறந்திருக்கலாம்என தகவல் வெளியானது.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் இறந்த சீனராணுவ வீரர்களின் உடல்களை, உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சீனாஅனுமதிக்கவில்லை என்றுஅமெரிக்க உளவுத் துறைநேற்று முன்தினம் தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது உயிரிழந்த சீன ராணுவ வீரர்களின் உடல்களை அவர்களின்முறைப்படி அடக்கம் செய்ய வேண்டாம் என்று ராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் சீன அரசு கேட்டுக் கொண்டதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை உலகத்துக்கு தெரிவித்து விடக்கூடாது என்ற மனநிலையில் சீனா இவ்வாறு செயல்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில்தான் செய்த தவறை மூடிமறைக்கும் நோக்கில் சீனா இவ்வாறு செயல்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது. இது ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்று அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் ப்ரீட்பார்ட் நியூஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

SCROLL FOR NEXT