சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்துவருகிற புயல்மழை காரணமாக யாங்சே ஆற்றின் அருகே உள்ள நான்கு நகரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த இரண்டு நாட்களாக புயலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. ஆறுகளில் அதீத வெள்ளப்பெருக்கான அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. கன மழை காரணமாக சில பகுதிகளில் கடுமையான நிலச்சரி ஏற்பட்டு இருக்கிறது. சாலைகள், விவசாய நிலங்கள் கடும் சேசத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் தொடர்ந்து கனமழைக்கான சூழல் நிலவி வருகிற நிலையில் ஹூபே மாகாணத்தில் சியானிங் மற்றும் ஜிங்ஜோ ஆகிய நகரங்களிலும், ஜியாங்சியில் மாகாணத்தில் நாஞ்சாங் மற்றும் ஷாங்க்ராவ் ஆகிய நகரங்களிலும் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
தற்போது ஏற்பட்டுள்ள புயலால் இதுவரையில் 140 பேர் காணாமல்போயுள்ளனர். அத்தனை பேரும் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதுவரையில் மொத்தமாக 8.6 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
விவசாய நிலங்களை அழித்து கட்டிடங்களைக் கட்டிவருவது, தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப் பெருக்கம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணாமாக சீனா இத்தகைய இயற்கைச் சீற்றத்துக்கு எளிய இலக்காக மாறியுள்ளது. முந்தைய ஆண்டுகளைவிடவும் கடந்த ஜூன் மாதத்தில் 13.5 சதவீதம் அதிகமாக உள்ளது.
சீனா இத்தகைய கன மழையை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்தாலும் 1961-க்குப் பிறகு அதன் அளவு 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. சீனா வேகமாக நகரமயமாதலை நோக்கி நகர்ந்து வருகிற நிலையில் வெள்ளப் பெருக்கை தொடர்ந்து சந்தித்து வருகிறது.