ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் விக்டோரியா மாகாணத்தில் அதிகபட்சமாக 288 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து விக்டோரியா மாகாண சுகாதாரத் துறை அதிகாரி பிரிட் கூறும்போது, “விக்டோரியாவில் கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. சுமார் 288 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விக்டோரியாவில் சுமார் 37,500 பேருக்கு ஒரே நாளில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது. நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் விக்டோரியாவில் கரோனா தொற்று மோசமான நிலையை எட்டும்” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரே ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் அங்கு கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 9,377 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 106 பேர் பலியாகி உள்ளனர். 7,576 பேர் குணமாகி உள்ளனர்.