உலகம்

10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் படிமங்கள் கண்டுபிடிப்பு

பிடிஐ

ஆஸ்திரேலியாவில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவர உண்ணி டைனோசரின் படிமங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த புதை படிமங்கள் கண்டறி யப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட எலும்புகள் ஆஸ்ட்ரோசாரஸ் வகை டைனோசர்களுடையவை என நம்பப்படுகிறது.

இந்த வகை டைனோசர்கள் 15 மீட்டர் நீளம் வரை வளரக் கூடியவை. கால்கள் தூண்கள் போலவும், உடல் பீப்பாய் போலவும் இருக்கும்.

சுமார் 1.6 மீட்டர் நீளமுள்ள விலா எலும்புகள் கிடைத்துள்ளன. இவை பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து அருங்காட்சி யகத்துக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளன. இதற்குமுன்பு ரிச்மாண்ட் பகுதியில் கிடைத்த எலும்பு படிமங்களிலிருந்து இவை மாறுபட்டிருப்பதாக புதை படிவ ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.

இந்த எலும்புகள் கடல்சார் உயிரினங்களு டையவை அல்ல, நிலவாழ் டைனோசர்களுடையவை என அருங்காட்சியக பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT