ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் பங்கேற்புத் தகுதியிலிருந்து சீனாவை வெளியேற்றுங்கள் என்று உய்குர் உரிமைகள் குழு ஐநாவை வலியுறுத்தியுள்ளது.
சீனா இனப்படுகொலைகளில் இறங்குவதற்கு முன்பாக இந்தச் சிறுபான்மையினருக்கு எதிரான அடாவடித்தனத்துக்கு எதிரான நடவடிக்கையை எடுங்கள் என்று ஐநாவை உய்குர் முஸ்லிம்கள் உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
“இப்போது செயல்படுவது தாமதமே, ஆனால் நடவடிக்கையே இல்லாமல் போவதற்கு தாமத நடவடிக்கை மேல்” என்று தனது ‘கிழக்கு துருக்கிஸ்தானில் இனப்படுகொலை’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த உரிமைகள் குழு கூறியுள்ளது.
உய்குர் முஸ்லிம் மக்களுக்கான அமைப்பின் செயல் இயக்குநர் ரஷன் அப்பாஸ் கூறும்போது, “மனித உரிமைகளுக்கும் ஜனநாயக சுதந்திரங்களுக்குமான குரல்களை கொடுப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். இந்த 21ம் நூற்றாண்டில் உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா மேற்கொண்டு வரும் அடக்குமுறை கற்பனைகளுக்கு எட்டாதது. இதை விட கற்பனை செய்ய முடியாதது உலக நாடுகள் அனைத்தும் பலவீனமாக, சீனாவுக்கு எதிராக இது தொடர்பாக செயல்படாமல் இருப்பது. அங்கு நடப்பது இனப்படுகொலை, இதனை மறுப்பவர்கள் சீனாவினால் அடையும் வணிகப்பயன்களை நேசிப்பவர்கள் ஆவார்கள்” என்றார்.
“இன்று கிழக்கு துருக்கிஸ்தான் (ஷின்ஜியாங் பகுதியை உய்குர்கள் அப்படித்தான் அழைக்கின்றனர்) பகுதியில் என்ன நடக்கிறது என்பதை கண்டுப்பிடிப்பது சாததியமற்றது. உலக அளவிலான பொதுக்கருத்து அங்கு நடக்கும் படுகொலைகளைப் பற்றி அறிந்திருக்காது. சீன அரசு தொடர்ந்து அந்தச் செய்திகளை மறுத்தே வருகிறது.
இப்பகுதியில் சீனாவின் செயல்பாடுகளைக் கண்காணிக்க பன்னாட்டு கண்காணிப்பு குழுவை உருவாக்க வேண்டும்.
சீன அரசு உய்குர் முஸ்லிம்கள் வகிக்கும் ஷின்ஜியாங் பகுதிக்கு சுமார் 11 லட்சம் ஹான் சீனர்களை அனுப்பி உய்குர் முஸ்லிம்கள் வீட்டுக்குச் சென்று தங்குமாறு பணிக்கப்படுகின்றனர். இளம் உய்குர் முஸ்லிம் பெண்களை ஹான் சீனர்களை மணக்குமாறு பலவந்தப்படுத்துகின்றனர். 2 மாதத்திற்கு ஒருமுறை ஹான் சீனர்களை இங்கு அனுப்பி அவர்கள் ஒருவாரம் வரைத் தங்கி தொல்லைக் கொடுக்கின்றனர்.
பன்றிக்கரி திங்க வேண்டும், அதே போல் மது அருந்த வேண்டும், அப்படி மறுத்தால் சந்தேக நபர் என்று கூறி முகாம்களுக்கு அனுப்பி விடுகின்றனர். எனவே ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் சீனாவுக்கான பங்கேற்பு உரிமையை பறிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று உய்குர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.