அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபர் டொனால்டு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 244-வது சுதந்திர தினத்தையொட்டி கடந்த சனிக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தியை படித்த பின்னர், அவருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் ட்ரம்ப் பதில் அனுப்பியுள்ளார்.
ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவில், ‘‘நன்றி எனது நண்பரே.... அமெரிக்கா இந்தியாவை விரும்புகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
தெற்கு டகோடா பகுதியில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.