உலகம்

கரோனாவைத் தொடர்ந்து சீனாவில் புதிதாக பரவும் ஸ்வைன் புளூ வைரஸ்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சீனாவில் புதிய வகை ஸ்வைன் புளூ வைரஸ் அமைதியாகப் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இந்த வைரஸ் கரோனா போன்று மீண்டும் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்குள் தடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனா வின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக் கப்பட்டது. வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியதாக விஞ்ஞானி கள் விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து சீன அரசு தரப்பு கூறும்போது, ‘‘வூஹான் இறைச்சி சந்தையில் கரோனா வைரஸ் தொற்றுள்ள வவ்வாலை சாப் பிட்ட பாம்பின் இறைச்சியை வாங்கி உண்டதில் மனிதர்களுக் கும் தொற்று பரவியது" என்று தெரிவிக்கப்பட்டது.

சீனாவின் வூஹானில் தோன் றிய கரோனா, அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் போன்று அடுத்தடுத்து பல்வேறு வகையான வைரஸ்கள் விஸ்வரூபம் எடுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை உறுதி செய்யும் வகை யில் சீனாவில் பன்றிகளிடம் புதிய வகை ஸ்வைன் புளூ வைரஸ் பரவி வருவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த பி.ஏ.என்.எஸ். மருத்துவ இதழ் விரிவான ஆய்வறிக் கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சீனாவில் கடந்த 2011-ல் பன்றிக் காய்ச்சல் அதிவேகமாகப் பரவியது. இந்த காய்ச்சலுக்கு காரணமான 'ஜி4இஏ எச்1என்1' ஸ்வைன் புளூ வைரஸ் குறித்து அப்போது முதலே சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரு கின்றனர்.

தற்போது 'ஜி4இஏ எச்1என்1' வைரஸ் சீனாவில் பன்றிகளிடம் பரவி வருகிறது. இந்த வைரஸ் மனிதர்களை எளிதில் தொற்றக் கூடியது. இது, கரோனா வைரஸ் போன்று பரவும் ஆபத்து உள்ளது. ஆரம்பத்திலேயே இதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா கருத்து

புதிய வைரஸ் குறித்து அமெ ரிக்க விஞ்ஞானிகள் கூறியதாவது:

சீனாவில் சுமார் 50 கோடிக்கும் மேற்பட்ட பன்றிகள் உள்ளன. அந்த நாட்டின் 10 மாகாணங்களில் உள்ள பன்றிப் பண்ணைகளில் மட்டுமே சீன விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கடந்த 2011 முதல் 2018 வரை பல்வேறு ஆய்வு களை நடத்தியுள்ளனர். அந்த விஞ் ஞானிகளின் ஆய்வின் அடிப்படை யிலேயே பி.ஏ.என்.எஸ். மருத்துவ இதழ் ஆய்வறிக்கையை வெளி யிட்டுள்ளது.

'ஜி4இஏ எச்1என்1' வைரஸ் மிகவும் ஆபத்தானது. இந்த வைர ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இப்போதே ஈடுபட வேண்டும். அப்போதுதான் மனித உயிர்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT