உலகம்

கராச்சித் தாக்குதலின் பின்னணியில் இந்தியாதான், இதில் சந்தேகமேயில்லை: இம்ரான் கான் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

கராச்சி பங்குச் சந்தை கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலின் பின்னணியில் இந்தியாதான் உள்ளது, இது உறுதி, சந்தேகமேயில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள், ஒரு போலீஸ் பலியாக, பாதுகாப்புப் படையினர் 4 மர்ம நபர்களையும் சுட்டுக் கொன்றனர்.

இந்தத் தாக்குதலுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இந்தியா மறுத்து விட்டது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், “இந்தத் தாக்குதலின் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. கடந்த சில மாதங்களாகவே என் அமைச்சரவைக்கு இந்தத் தாக்குதல் குறித்துத் தெரியும். நான் என் அமைச்சர்களிடத்தில் தகவல் தெரிவித்தேன். எங்கள் முகமைகள் அனைத்தும் உயர் உஷார் நிலையில் உள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT