உலகம்

மும்பை தாக்குதலில் தொடர்புடைய டேவிட் ஹெட்லியை நாடு கடத்த முடியாது: அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தகவல்

செய்திப்பிரிவு

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, மும்பை தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இதுதொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தானியரான, தஹாவூர் ராணா அமெரிக்காவின் சிகாகோநீதிமன்றத்தில் சரணடைந்தார்.

லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தீவிரவாதி டேவிட் ஹெட்லிக்கும் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பாகிஸ்தானில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய ஹெட்லி, அந்நாட்டில் ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டு 35 ஆண்டு சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட விசாரணையில், ராணாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. 2005-ம் ஆண்டு நாளிதழ் ஒன்று, முகமது நபியின் கார்ட்டூனை வெளியிட்டதற்காக அதன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், 10 வருடங்களுக்கு மேலாக லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், மோசமான உடல்நிலை மற்றும் கரோனா வைரஸ் அறிகுறிகாரணமாக விடுதலை செய்யப்பட்டார். ஆனால், இவரிடம் இந்தியாவிசாரணை நடத்த தேவை உள்ளதால், விடுதலை செய்யப்பட்ட 2-வது நாளில் கைது செய்யப்பட்டார். இவரும் மும்பை தாக்குதல்குற்றவாளியான டேவிட் கோல்மேன் ஹெட்லி ஆகியோரும் உயர் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள உள்ள பெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்கஉதவி அட்டர்னி ஜெனரல் ஜான் ஜே.லுலேஜியான் கூறியதாவது:

அமெரிக்காவில் நடந்த குற்றத்தை டேவிட் ஹெட்லி ஒப்புக்கொண்டு தன்னை மன்னிக்குமாறு நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டார். ஆனால் தஹாவூர் ராணா அப்படிச் செய்யவில்லை. எனவேடேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது. அதே நேரத்தில் ராணா இருக்கும் சூழ்நிலை வேறு. அவர் தனது குற்றத்துக்காக இதுவரை மன்னிப்பும் கோரவில்லை. போலீஸாருக்கு ஒத்துழைக்கவும் இல்லை. எனவேஹெட்லிக்கு வழங்கிய சலுகைகளை ராணாவுக்கு வழங்க முடியாது. ராணாவை இந்தியாவுக்குநாடு கடத்தலாம். இவ்வாறு ஜே.லுலேஜியான் கூறினார்.

SCROLL FOR NEXT