உலகம்

ஆப்கனில் விஷவாயு பரவச் செய்து தாக்குதல்: 35 சிறுமிகள் பாதிப்பு

ஐஏஎன்எஸ்

ஆப்கனில் பள்ளியில் விஷ வாயு பரவச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 35 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிராத் மாகாணத்தின் பள்ளியில் இன்று (திங்கட்கிழமை) காலை விஷ வாயுவை தெளிப்பான் மூலம் பரவச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டு சுமார் 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 6வது முறையாக பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இதுபோலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக, தக்கார் மாகாணத்தில் உள்ள பெண்கள் உயர் நிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் அவர்கள் விஷத்தைக் கலந்தனர். அதனை குடித்த 150 மாணவிகளுக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் பெண் கல்வியை எதிர்க்கும் தாலிபான் பள்ளிகளில் இத்தகைய தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT