உலகம்

ட்ரம்ப் உத்தரவுகளுக்கு இணங்க ஊரடங்கு தளர்வுகளின் தீங்கான விளைவு : ஒரே நாளில் 34,700 பேருக்குத் தொற்று- அமெரிக்காவைத் திரும்பி அடிக்கும் கரோனா

ஏபி

ஹூஸ்டன், ஜூன்24, அமெரிக்காவில் பொருளாதார நடவடிக்கைகளுக்காக மீண்டும் நகரங்கள் திறக்கப்படுவதையடுத்து கரோனா வைரஸ் பரவல் மீண்டும் ஒரே நாளில் உச்சம் தொட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் ஒரே நாளில் 36,400 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டது, அதற்குச் சற்றுக் குறைவாக புதனன்று 34,700 புதித கரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

கரோனா ஹாட்ஸ்பாட்களான நியூயார்க், நியூஜெர்சியில் சீராக புதிய தொற்றுக்கள் எண்ணிக்கை குறைந்தாலும், அரிசோனா, கலிபோர்னியா, மிசிசிபி, நெவாடா, டெக்சாஸ் ஆகிய நகரங்களில் சீராக புதிதாக தொற்றுக்கள் அதிகமாகியுள்ளன. இதில் சில நகரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக வட கரோலினா, தென் கரோலினா.

ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையின் சி.இ.ஓ. டாக்டர் மார்க் பூம் கூறும்போது, ‘மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர், மீண்டும் வந்து விட்டது, மீண்டும் வந்து நம்மை திரும்பித் தாக்குகிறது கரோனா’ என்றார்.

உலகம் முழுதும் கரோனா வைரஸ் 95 லட்சத்து 27 ஆயிரத்து 124 பேரை பாதித்துள்ளது. 484,972 பேர் மரணமடைந்துள்ளனர். 51 லட்சத்து 75 ஆயிரத்து 405 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்து 62 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது இதில் பலியானோர் எண்ணிக்கை 1,24,281 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கரோனா பாதிப்பு ஒரேநாளில் அதிகரித்ததையடுத்து முதலீட்டாளர்கள் தயக்கத்தினால் பங்குச்சந்தை சரிவு கண்டன.

புளோரிடாவில் மட்டும் ஒரேநாளில் 5,500 பேருக்கு கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. மே 1ம் தேதி ஊரடங்கை முற்றிலும் அகற்றிய டெக்ஸாரில் கரோனா நோயாளிகளின் மருத்துவமனைச் சேர்க்கை இரட்டிப்பாகியுள்ளது. புதிய கரோன தொற்றுக்கள் 2 வாரங்களில் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

ஹூஸ்டனில் 8 மெத்தடிஸ்ட் மருத்துவமனைகலில் கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது, மருத்துவமனை மேர்கொண்ட டெஸ்ட்களில் 20% பாசிட்டிவ் என்று வருகிறது. இது லாக் டவுன் காலக்கட்டத்தில் 2%, 4% ஆக மட்டுமே இருந்தது.

இதே போன்ற நிலைமை தொடர்ந்தால் 2000-படுக்கை கொண்ட மருத்துவமனைச் சங்கிலியில் 600 கரோனா நோயாளிகள் அனுமதிகப்பட நேரிடும், இதனால் அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சைகளை ரத்து செய்ய நேரிடும் என்கிறார் டாக்டர் பூம்.

மக்கள் அனைவரும் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும், மக்கள் கூடுமிடங்களைப் பார்த்தால் சமூக இடைவெளி, முகக்கவச கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விடுகின்றனர், இதைப் பார்க்கும் போது கடும் கோபம் வருகிறது என்கிறார் டாக்டர் பூம்.

டாக்டர் ஜோசப் ஜெரால்ட் கூறும்போது, அரிசோனாவில் அடுத்த வாரங்களில் மருத்துவமனை படுக்கை வசதிகள் போதாது என்ற நிலை ஏற்படப்போகிறது. நாங்கள் பெரிய பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறோம். புதிய ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் ஆனால் கவர்னர் டக் டியூஸி மறுத்துவருகிறார், என்றார்.

நியூயார்க், கனெக்டிகட் , நியூஜெர்சிக்கு வருபவர்கள் தங்களைத் தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் கரோனா அதிகரித்து வரும் நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் தலதூக்கிய கரோனாவை மீண்டும் சீனா வீழ்த்தி அடக்கியுள்ளது. 11 நாட்களில் 25 லட்சம் பேருக்கு கரோனா டெஸ்ட் நடத்தியுள்ளது.

SCROLL FOR NEXT