உலகம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 18 பேர் காயம்

செய்திப்பிரிவு

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், ''துருக்கியின் கிழக்குப் பகுதிகளில் உள்ள கர்லிலோவா மாவட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 18 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமாக துருக்கி அதிபர் எர்டோகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, துருக்கியில் எலாஜிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரைஸ் நகரில் கடந்த ஜனவரி மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியாகினர். 500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

துருக்கியில் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 17,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT