உலகம்

கரோனா நிலவரம்: 75,00,777 பேர் கரோனாவால் பாதிப்பு; தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்கா முதலிடம்

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் சுமார் 75,00,777 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட தகவலில், “உலகம் முழுவதும் கரோனா தொற்றால் சுமார் 75,00,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனாவுக்கு 4,20,993 பேர் பலியாகியுள்ளனர். 39,66,293 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா தொடர்ந்து கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 20,22,488 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,13,803 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து 8,02,828 பேர் பாதிப்புடன் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலை அடுத்து ரஷ்யா, பிரிட்டன், இந்தியா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் அதிக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக சில நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT