உலகம்

அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிப்பு

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ''அமெரிக்காவில் 20,00,464 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,12,924 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். நியூயார்க் தொடர்ந்து கரோனாவின் மையமாக இருந்து வருகிறது. நியூயார்க்கில் இதுவரை 3,80,156 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,542 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நியூ ஜெர்சி, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கரோனா தொற்று ஜூன் மாதத்திலிருந்து அதிகரித்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

உலக அளவில் கரோனா தொற்று மற்றும் இறப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

முன்னதாக, கரோனா விவகாரம் தொடர்பாக சீனா வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

உலக அளவில் கரோனா தொற்றால் 74,58,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,19,020 பேர் பலியாகி உள்ளனர். 37,78,218 பேர் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT