போகோ ஹராம் தீவிரவாத அமைப்பை முற்றிலும் அழித் தொழிக்காமல் ஓயப்போவ தில்லை என்று நைஜீரியா உள் ளிட்ட 4 நாடுகள் சூளுரைத் துள்ளன.
இந்த தீவிரவாத அமைப்பு சமீபத்தில் 220 பள்ளிக் குழந்தை களை கடத்திச் சென்றதுடன், அவர்களை விடுவிக்க வேண்டு மானால், சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தினரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
பாரீஸில் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பை எதிர்கொள் வது தொடர்பான மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் பிரான்ஷூவா ஹொலந்த் ஏற்பாடு செய்திருந்தார். சர்வதேச மற்றும் பிராந்திய நடவடிக்கை என்ற பெயரில் தீவிரவாத அமைப்புக்கு எதிராக இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நைஜீரியா, பெனின், கேமரூன் உள்ளிட்ட 4 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றன.
இந்த நாடுகள் அனைத்தும் இணைந்து கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை தேடுவது என்றும், அது தொடர்பான உளவுத் தகவல்களை பரிமாறிக்கொள்வது என்றும் முடிவு செய்தன. இந்த 4 நாடுகளின் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு தேவையான பயிற்சியையும், தொழில்நுட்ப ஆலோசனை களையும் மேற்கத்திய நாடுகள் அளிக்கவுள்ளன.
மாநாட்டில் பேசிய நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனாதன், “போகோ ஹராம் உள்ளூர் தீவிர வாத அமைப்பு அல்ல. அது அல் காய்தாவைப் போன்று திட்டமிட்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பை அழிக்க பிராந்திய அளவில் இணைந்து செயல்படவுள்ளோம்” என்றார்.