உலகம்

கடந்த 24 மணி நேரத்தில் 1 ,30,000 பேர் உலக முழுவதும் கரோனாவால் பாதிப்பு

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,30,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறும்போது, “ கடந்த 24 மணி நேரத்தில் உலக முழுவதும் சுமார் 1,30,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உலக முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67, 03,095 பேராக அதிகரித்துள்ளது . இதுவரை 3,93,224 பேர் கரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 3,252,378 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் முதல், இரண்டு இடங்களில் உள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது

SCROLL FOR NEXT