உலகம்

பாகிஸ்தானில் கரோனா தொற்று 85,264 ஆக அதிகரிப்பு; அதிகம் பாதிப்புக்குள்ளாகும் சிந்து மாகாணம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் மேலும் 4,688 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,688 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 85,264 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 1,770 ஆக அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிந்து மாகாணம் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிந்து மாகாணத்தில் மட்டும் 33,000 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரதமர் இம்ரான் கான் எடுத்து வருகிறார். மருத்துவ நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் கரோனாவிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வந்தது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் சில வாரங்களுக்கு முன்னர் தளர்த்தியது. மேலும், பாகிஸ்தான் அரசு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கிடையேயான விமானச் சேவையை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT