இத்தாலியில் கரோனா பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து அங்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பயணத் தடைகள் விலக்கப்பட்டு உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா பரவல் தீவிரவத்தை அடைந்தது. பெரும் உயிரிழப்பையும், தொற்று பரவலையையும் இத்தாலி சந்தித்தது. இந்த நிலையில் மே மாதம்தான் இத்தாலியில் கரோனா பரவல் குறைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு படிப்படியாக தளர்வுகளை இத்தாலி அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது பயணத் தடையை விலக்குகிறது இத்தாலி.
இதுகுறித்து இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே கூறும்போது, ”கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கரோனா தடுப்பதில் இத்தாலி சரியான பாதையில் உள்ளது. மே மாதம் 4 ஆம் தேதி முதல் நாங்கள் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளை மீண்டும் திறந்தபோது அது எங்களை பொருளாதார ரீதியாக ஊக்கமளித்தது. இந்த நிலையில் இன்று முதல் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் இத்தாலிக்கு வருகை தரலாம். அவர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். தேசிய அளவிலும் பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது” என்றார்.
இத்தாலியில் கரோனா வைரஸுக்கு 2, 33,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,601 பேர் பலியாகி உள்ளனர். 1,60,938 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.