அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை வெடித்து எழச்செய்த கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவரின் போலீஸ் காவல் மரணம் குறித்து நியூஸிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ‘தன்னை அது வெகுவாக பயமுறுத்துகிறது’ என்று அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக நியூஸிலாந்தில் நடைபெற்ற அமைதி போராட்டத்தையும் ஆதரித்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், சமூக விலக்கல் கடைப்பிடிக்கப் படாமல் நடந்ததை கண்டித்தார்.
திங்களன்று நியூஸிலாந்தில் ஆயிரக்கணக்கானோர் கருப்பு அமெரிக்கர் பலிக்கு கடும் கண்டனங்களை எழுப்பினர்.
இந்நிலையில் நியூஸிலாந்து டிவியில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறும்போது, ‘போராடும் அனைவருடனும் நான் நிற்கிறேன். இது உண்மையில் பயங்கரம், நாம் பார்ப்பது, பார்த்துக் கொண்டிருப்பது பயங்கரம், நான் உண்மையில் பயன்து போய்விட்டேன்’ என்று தெரிவித்தார்.
“அமைதியான போராட்டத்தை நான் தடுக்க விரும்பவில்லை. ஆனால் சில சுதந்திரா ஆதரவாளர்கள் ட்ரம்புக்கு எதிராக இருக்கின்றனர். இவர்கள் சமூக நீதி, பன்முகப் பண்பாடு, சமத்துவம் என்று பேசுகின்றனர்.
ஒருநாடாக எங்கு இத்தகைய அநீதி நடந்தாலும் நாங்கள் அதற்காக எழுந்து நிற்போம்” என்றார் ஜெசிந்தா ஆர்டர்ன்.