அர்மேனியா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ அர்மேனியா பிரதமர் நிகோல் பாஷினியன் தனது பேஸ்புக் பக்கத்தில் தனக்கு கரோனா வைரஸுக்கு எந்த அறிகுறி இல்லாத நிலையில் செய்யப்பட்ட மருத்து பரிசோதனையில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நான் வீட்டிலிருந்து பணிபுரிய இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஓட்டல் ஊழியர் மூலம் தனக்கு கரோனா பரவியதாக நிகோல் பாஷினியன் தெரிவித்துள்ளார். மேலும் நிகேலின் குடும்பத்தினர்களுக்கு கரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
30 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட அர்மேனியாவில் 9,000 க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 130 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 62,67,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,73,961 பேர் உயிரிழந்துள்ளனர். 28,47,541 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.