சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலியானதாக போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லண்டனில் செயல்படும் போர் கண்காணிப்புக் குழு கூறும்போது, “சிரியாவில் துருக்கியில் உள்ள அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த தீவிரவாத அமைப்பு மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 தீவிரவாதிகள் பலியாயினர். பலர் காயமடைந்தனர். ஆனால், இந்தத் தாக்குதலை ரஷ்யாதான் நடத்தியதா என்பது உறுதியாகத் தெரியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் சிரியாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 500 பேர் வரை பலியாகியுள்ளனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
கரோனா பாதிப்பு
சிரியாவில் 121 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.