உலகம்

காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி, இந்திய அரசு தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் பாக். ராணுவம் சும்மா இருக்காது: பாக். ராணுவ மேஜர் ஜாவேத் பாஜ்வா

செய்திப்பிரிவு

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவேத் பாஜ்வா எல்லைப் பகுதியில் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அதன் பின்னர் ராணுவ வீரர்களிடையே அவர் பேசும்போது, “காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி அதில் இந்திய அரசு ராணுவ ரீதியாகவோ, அரசிய ரீதியாகவோ மாற்றம் செய்ய நினைத்தால் பாகிஸ்தான் ராணுவம் கடுமையான பதிலடி கொடுக்கும்.

தெற்காசிய அளவில் பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும். எந்த வித அச்சுறுத்தலுக்கும் பாகிஸ்தான் அஞ்சாது, அதை முறியடிக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது.

எல்லைப்பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் அதை தடுக்கவும் பதிலடி கொடுக்கவும் பாகிஸ்தான் ராணுவம் தயாராகவே உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT