கோப்புப்படம் 
உலகம்

கராச்சியில் விபத்துக்குள்ளான விமானம் கடைசியாக 2 மாதங்களுக்கு முன்பு பரிசோதிக்கப்பட்டது: விசாரணையில் புதிய தகவல்

பிடிஐ

பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று 99 பேருடன் விபத்துக்குள்ளான விமானம் கடைசியாக கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது அதன்பின் ஆய்வு செய்யப்படாமல் இயக்கப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

லாகூரிலிருந்து கராச்சி நகருக்கு இயக்கப்பட்டபோதுதான் நேற்று விபத்துக்குள்ளானது. அதற்கு முதல்நாள் அதாவது வியாழக்கிழமை மஸ்கட்டிலிருந்து லாகூருக்கு வந்துள்ளது. 2 மாதமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் தனது 2-வது பயணத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமான நிறுவனமான பிஐஏ நிறுவனம் பாகிஸ்தான் அரசுக்கு கட்டுப்பட்டதாகும் கடந்த பல ஆண்டுகளாக கடும் நிதிநெருக்கடியில் இயக்கப்பட்டதால், முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி ஆய்வு செய்யப்பட்டு இயக்கப்பட்டது அதன்பின் விமானம் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டபின் பிகே-8303 விமானம் தனது 2-வது பயணத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பாகிஸ்தானின் டான் நாளேடு தெரிவிக்கிறது

ஆனால்,இதை மறுத்துள்ள விமானநிறுவனமான பிஐஏ, விமானம் பறக்கும் நிலையில் தகுதியாகத்தான் இருந்தது, லேண்டிங் கியரில் எந்தவிதமான சிக்கலும்இல்லை என விளக்கம் அளித்துள்ளது

லாகூர் நகரிலிருந்து 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொதத்ம் 99 பேருடன் பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனத்தின் பிகே8303 என்ற விமானம் கராச்சி நகருக்கு நேற்று புறப்பட்டது

விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தரையிறங்க சில நிமிடங்கள் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையிலிருந்து விமானத்தின் தகவல் துண்டிக்கப்பட்டது. கராச்சி விமானநிலையத்துக்கு அருகே இருக்கும் மலிர் பகுதியுள்ள மாடல் காலனி குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 25 வீடுகள் சேதமடைந்தன.

இந்த விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக 2 பயணிகள் மட்டுமே உயிர்பிழைத்துள்ளனர், மற்ற 97 பேரும் உயிரிழந்துவி்ட்டனர்

பிஐஏ விமான நிறுவனத்தின் எந்திரவியல் பராமரிப்பு துறை கூறுகையில் “ கடைசியாக விமானம் மார்ச் 22-ம் தேதி விமானத்தின் இரு எந்திரங்கள், லேண்டிங் கியர், டயர் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது. அதன்பின் பரிசோதிக்கப்படவி்ல்லை. விமானப்போக்குவரத்து தொடங்கப்பட்டபின், விமானம் மஸ்கட்டிலிருந்து லாகூருக்கு இயக்கப்பட்டு, லாகூரிலிருந்து கராச்சிக்கு இயக்கப்பட்ட 2-வது பயணத்தில் விபத்தில் சிக்கியது. விமானத்தி்ல் உள்ள இரு எஞ்சின்களும் திருப்திகரமான மனநிலையில் இருந்தன. பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட இடைவெளியில் சீராகச் செய்யப்பட்டு வந்தன. 2020-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதிவரை விமானத்தை இயக்க விமானப் போக்குவரத்து ஆணையம் தரச்சான்றிதழ் அளி்த்துள்ளது” எனத் தெரிவி்த்தனர்

விமானப்போக்குவரத்து விபத்துப்பிரிவு மற்றும் விசாரணை வாரியத்தின் தலைவர் முகமது உஸ்மான் கானி தலைமையில் விபத்து குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு உத்தரவி்ட்டுள்ளது. இந்த குழுவினர் மிக விரைவக விசாரணையை அறிக்கையை அரசிடம் அளிப்பார்கள் எனத் தெரிகிறது, இடைக்கால அறிக்கை அடுத்த ஒரு மாதத்துக்குள் வழங்கப்படும்.

ஆனால் பாகிஸ்தான் விமானிகள் கூட்டமைப்பு(பிஏஎல்பிஏ) விபத்துக்குறித்து சர்வதேச அமைப்புகள் விசாரித்தால்தான் தவறு நடந்ததுகுறித்து கண்டுபிடிக்க முடியும் இல்லாவிட்டால் உண்மை மறைக்கப்படும் எனத் ெதரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு அமைத்துள்ள விசாாரணைக்குழுவின் அறிக்கையை முற்றிலும் புறக்கணிப்போம் என அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது

பாகிஸ்தானின் டான் நாளேட்டுக்கு விபத்தை நேரில் பார்த்த இஜாஸ் மஜிஸ் என்பவர் அளித்த பேட்டியில் “ விமானம் தரையிறங்கும் போது இரு முறை லேண்டிங் கியரை விமானி இயக்கியும் விமானத்தின் டயர்கள் வெளியே வரவில்லை. விமானத்தை மீண்டும் மேலை தூக்குவதற்கு விமானி முயற்சிப்பதற்கு முன் விமானத்தின் வயிற்றுப்பாகம் தரையைத் தொட்டத்தால் கட்டிடத்தில் மோதியது. விமானத்தின் ஒரு புறம் புகை வந்ததையும் நான் பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT