ரஷ்யா பிரதமர் 
உலகம்

கரோனா சிகிச்சை முடிந்து ரஷ்யப் பிரதமர் பணிக்குத் திரும்பினார்

செய்திப்பிரிவு

கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தற்போது வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், தனது பணிக்குத் திரும்பியுள்ளார்.

ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மிகைல் மிஷுஸ்டின் குணமாகியுள்ள நிலையில், அவர் பணிக்குத் திரும்பியுள்ளார்.

ரஷ்யாவின் முக்கிய அரசியல் தலைவர் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கல்வி, கலாச்சாரம், கட்டுமானம் ஆகிய துறைகளின் அமைச்சர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. கரோனா தொற்று எண்ணிக்கையில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யாவில் 9,263 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் ரஷ்யாவில் 2,90,678 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2,837 பேர் பலியான நிலையில் 76,130 பேர் குணமாகியுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் ரஷ்யாவில் 115 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரஷ்யாவில் பலி எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், மருத்துவமனை தயார் செய்யப்பட்டதன் காரணமாகவே இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT