உலகம்

மாட்டிறைச்சிக்குத் தடை, பார்லிக்கு கூடுதல் கட்டணம்: கரோனா விசாரணை ஆதரவுக்காக ஆஸி.யைத் தண்டிக்கும் சீனா 

ஏபி

கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது தொடர்பான விசாரணைக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவித்ததையடுத்து கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்று சீனா ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவின் பார்லிக்கு கூடுதல் வரியை விதித்தது சீனா, ஏற்கெனவே ஆஸ்திரேலியாவிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தது குறிபிடத்தக்கது

இந்நிலையில் ஆஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்ஹாம், பார்லிக்கு ஆஸ்திரேலியா மானியம் அளிப்பதாகக் கூறிய சீனாவின் குற்றச்சாட்டைமறுத்தார்

மாட்டிறைச்சியை தடை செய்ததற்கு லேபிளிங் விவகாரத்தைக் காரணம் காட்டியது.

ஆனால் இந்த பார்லி மீதான கூடுதல் கட்டணம் மற்றும் மாட்டிறைச்சித் தடையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் மேல்முறையீடு செய்வோம் என்று வர்த்தக அமைச்சர் பர்மிங்ஹாம் தெரிவித்தார்.

இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சர் ஸாங் ஷான் என்பவரைத் தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார் பர்மிங்ஹாம்.

பார்லி கட்டண விவகாரத்தினால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளருக்கு சப்ளை செய்ய முடியாமல் பார்லி தேங்கிக் கிடப்பதாக பார்லி விவசாயி ஆண்ட்ரூ வெய்டிமான் தெரிவித்தார்.

சீனாவின் புதிய கட்டணங்களால் ஆஸி. பொருளாதாரத்துக்கு 500 மில்லியன் ஆஸி. டாலர்கள் கூடுதலாக செலவழியும்.

கரோனா வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்ற விசாரணைக்கு இது நேரமல்ல என்று சீனா ஏற்கெனவே தெரிவித்திருந்தது, இப்போது கரோனாவுக்காக ஒருங்கிணைந்த செயல்பாடுதான் முக்கியம் என்று கருதுகிறது சீனா, ஆனால் அமெரிக்கா சீனா மீது ஏகபட்ட கோபத்தில் உள்ளது.

SCROLL FOR NEXT