இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் என்று ஈரான் நாட்டுத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
“இராக், சிரியா என்ற இரண்டு அரபு நாடுகளில் அமெரிக்கப் படைகள் இருப்பது சட்டவிரோதமாகும்” என்றார்.
ஞாயிறன்று ஈரானிய மாணவர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் உரையாடிய காமெனி, “நிச்சயமாக இராக், சிரியாவில் அமெரிக்கர்கள் இருக்கப் போவதில்லை, இவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
ஏனெனில் அமெரிக்கர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றனர். பிராந்திய தேசங்கள் அமெரிக்கர்களை வெறுக்கின்றனர்.
ஈரானின் தீமையனான எதிரி அமெரிக்காதான்” என்று அவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.
சிரியாவில் தற்போது 200 அமெரிக்க படைகள் உள்ளன. இராக்கில் 1 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கப் படைகள் உள்ளன.