உலகம்

கரோனா தொற்று பீதியில் வெளியே சென்று பணியாற்றும் ஹிஸ்பானிய, ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள்

ஏஎன்ஐ

அமெரிக்காவில் 100% லாக் டவுன் அமலாக்கம் செய்யப்படவில்லை, 10-ல் 6 அமெரிக்கர்கள் வீட்டிலிருந்த படியே பணியாற்றாமல் வெளியே சென்றும் அலுவலகம் சென்றும் பணியாற்றுவதால் கரோன தொற்று பீதியில் உள்ளனர்.

இவர்களுக்கும் தொற்றி இவர்கள் வீட்டிலிருப்பவர்களுக்கும் தொற்று ஏற்பட்டால் பெரிய சிக்கல்தான் என்று அவர்கள் பீதியில் உள்ளனர்.

இது தொடர்பாக வாஷிங்டன்போஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் 8,000 பேர்களுக்கும் கூடுதலாக கருத்துக் கணிப்புச் செய்ததில் அமெரிக்காவில் தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த ஸ்பானியர்கள் மற்றும் கருப்பரினத்தவர்கள் வீட்டை விட்டு வெளியே சென்று வேலை பார்க்க நேரிடுவதால் கரோனாவுக்கு ஆளாகி தங்கள் வீட்டிலிருப்பவர்களுக்கும் பரப்பி விடுவோம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சமீபத்திய தரவுகளின் படி அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14, 42,819 ஆக அதிகரிக்க பலி எண்ணிக்கை 87,530 ஆக உள்ளது.

மூன்றில் ஒரு பங்கு அமெரிக்கர்கள் அதுவும் அடிப்படை அத்தியாவசிய பணியில் இருப்போர் வீட்டை விட்டு வெளியே சென்றுதான் வேலைபார்க்க வேண்டிய நிலை உள்ளது, எவ்வளவு குறைத்தாலும் வாரத்துக்கு ஒருமுறையாவது வாழ்வாதாரத்திற்காக வெளியில் சென்று பணியாற்ற வேண்டியுள்ளது.

மேலும் இப்போது பலதரப்பட்ட பணியாளர்களும் வீடுகளிலிருந்து பணிக்குத் திரும்புவதாலும் பெரிய அளவில் போக்குவரத்து தொடங்கும் என்பதாலும் கரோனா பரவும் அச்சம் அதிகரித்துள்ளது.

வெளியில் சென்று பணியாற்றுபவர்களில் 35% முகக்கவசம் எப்போதும் அணிகின்றனர், 39% மக்கள் எப்போதாவது அணிகின்றனர். 265 மக்கள் முகக்கவசம் அணிவதில்லை.

அமெரிக்க மக்கள் தொகையில் 33% ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஆவார்கள் மே 1ம் தேதி நிலவரப்படி கரோனாவுக்கு அமெரிக்காவில் பலியானோர் விகிதத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விகிதம் 70% ஆகும்.

இவர்களில் பெரும்பாலானோர் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் பணிகளான தபால் சேவைகள், வீட்டு சுகாதாரப் பணி, உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மத்தியில் தற்போது பெரிய அளவில் கரோனா பீதி பரவியுள்ளது..

SCROLL FOR NEXT