உலகம்

தொடர்ந்து பரவும் கரோனா: உலகம் முழுவதும் 45,27,127 பேர் பாதிப்பு

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் சுமார் 45,27,127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் தற்போது 5 மாதங்களைக் கடந்தும் உலகம் முழுவதும் கடுமையான நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “ உலகம் முழுவதும் 45, 27,127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,02,000 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட இறப்பு இரண்டிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் சுமார் 14,17,512 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 85,886 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரிட்டனில் அதிகப்படியான இறப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் 33,693 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் அதிகப்படியான கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் 2,52,245 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கரோனா தொற்று அதிக எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT