உலகம்

ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று: 10-வது நாளாகத் தொடர்ந்து 10,000க்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,899 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 2,42,271 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த பத்து நாட்களாக ஓவ்வொரு நாளும் 10,000 பேர் வரை ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக கரோனாவால் பாதிப்புக்குள்ளான முதல் பத்து நாடுகளில் ரஷ்யா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.

முதல், இரண்டாம் இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,899 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 2,42,271 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 96 பேர் கரோனா தொற்றால் இறக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 2,000 பேரைக் கடந்துள்ளது. இதுவரை ரஷ்யாவில் கரோனா தொற்றிலிருந்து 48,003 பேர் குணமடைந்துள்ளனர்.

முன்னதாக, ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT