சீனாவின் வடமேற்கு நகரமான ஜிலின், இதன் மக்கள் தொகை 40 லட்சமாகும். இங்கு கொத்தாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அந்த நகரம் பகுதியளவில் மூடப்பட்டது, லாக்டவுனில் சென்றுள்ளது. போக்குவரத்து மற்றும் பள்ளிகள் முடக்கப்பட்டன. இதனையடுத்து கரோனா இரண்டாவது அலை பதற்றம் அங்கு ஏற்பட்டுள்ளது.
ஜிலின் நகரில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. நகர்த்திலிருந்து வெளியேற விரும்புவோருக்கு கோவிட்-19 டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்தால்தான் வெளியேற முடியும்.
சினிமா தியேட்டர்கள், உள்ளரங்க ஜிம்கள், இண்டர் நெட் கஃபேக்கள், மற்றும் பிற பொழுதுபோக்கு அரங்குகள் மூடப்பட்டன. அனைத்து மருந்துக் கடைகளும் காய்ச்சல் மற்றும் வைரச் எதிர்ப்பு மருந்து விற்பனைகளை உடனடியாக அரசுக்குத் தெரிவித்தாக வேண்டும்.
ஜிலின் மாகாணத்தில் இந்த நகரம் ரஷ்யா வடகொரியா எல்லைகளைக் கொண்டதாகும்.
இங்கு ஷுலான் என்ற புறநகர்ப்பகுதியில் கடந்த வாரம் கரோனா தொற்று கொத்தாகத் தோன்றியது. ஜுலின் துணை மேயர் “சூழ்நிலை மிகவும் சீரியசாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது, பெரிய எதிர்காலப் பரவலுக்க்கான பெரிய இடர்பாடு உள்ளது” என்று புதனன்று எச்சரித்தார்.
நகரில் 6 புதிய தொற்றுக்கள் புதனன்று தோன்றியது. இவை அனைத்து ஷுலான் பரவலைச் சேர்ந்ததுதான். இதனையடுத்து ஷுலானில் மட்டும் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஷுலானில் பொதுப்போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.
ஜிலின் மாகாணத்தில் உள்ள ஜிலின் நகரம் இந்த மாகாணத்தின் 2வது பெரிய நகரமாகும். இது ரயில்சேவையை இன்று முற்றிலும் நிறுத்தியது.
சமீபத்தில் திறந்த பள்ளிகள் உடனடியாக மூடப்பட உத்தரவிடப்பட்டது.
வைரஸ் குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம் இரண்டாம் அலை ஆபத்து இருப்பதாக சீன அதிபரே சமீபத்தில் எச்சரித்திருந்தார்.
வூஹானில் சமீபத்தில் புதிய கரோனா தொற்றுக்கள் ஏற்பட்டதையடுத்து 1 கோடியே 10 லட்சம் மக்களையும் டெஸ்ட் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.