உலகம்

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா

செய்திப்பிரிவு

சீனாவில் புதிதாக 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலனவர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 78,046 பேர் குணமடைந்துவிட்டனர். அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்ட 836 தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று முதலில் பரவிய சீனாவின் ஹுபே மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று ஏற்படவில்லை.

கரோனா வைரஸிலிருந்து பாதிக்கப்பட்டு தற்பபோதுத்தான் சீனா மீண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்தான் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தியது.

இந்த நிலையில் கரோனா பரவலைத் தடுப்பதும் அதனைக் கட்டுக்குள் வைப்பதும் இன்னும் சவாலாகவே உள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிக் தெரிவித்திருந்தார்.

சீனாவில் கரோனா தொற்றால் 82,887 பாதிக்கப்பட்டுள்ளனர்.4,633 பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT